‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பூங்கா சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பூங்கா முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் உபகரணங்களை சரிசெய்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.