ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: கணவன்-மனைவிக்கு தீவிர சிகிச்சை

ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-03-15 18:43 GMT
நொய்யல், 
கரூர் மாவட்டம் தாந்தோணிமலை என்.ஜி.ஓ. நகர் சக்திபார்க் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 46). இவர் தனது மனைவி மோகனப்பிரியாவுடன் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். புன்னம் சத்திரம் அருகே வந்தபோது கரூரிலிருந்து நொய்யல் நோக்கி எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த நொய்யல் அருகே உள்ள வல்லா குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலாஜி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதினார். இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விபத்து ஏற்படுத்திய ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்