மாநில அளவிலான மல்யுத்த போட்டி: கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் சாதனை
மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் 3 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
கரூர்,
தமிழ்நாடு மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ப்ரீ ஸ்டைல் பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி மாணவிகள் சினேகா 59 கிலோ எடை ப்பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், கிருத்திகா 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், மகுடேஸ்வரி 50 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.