மணல் குவாரிகளை திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

மணல் குவாரிகளை திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

Update: 2022-03-15 18:42 GMT
திருச்சி, மார்ச்.16-
திருச்சி மலைக்கோட்டை வட்டார டயர் மாட்டு வண்டி மணல் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டா் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து  கொடுத்த மனுவில்,  திருச்சி மாவட்டத்தில் கிராமங்களில் வசித்து வரும் 2 ஆயிரத்து 400 குடும்பத்தினர் மணல் மாட்டு வண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது, தாளக்குடி மற்றும் மாதவ பெருமாள் கோவில் பகுதியில் உள்ள மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகள் கொரோனா தொற்று காரணமாக 11 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மணல் எடுக்க முடியாததால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வண்டி மாடுகளுக்கு வைக்கோல் மற்றும் தீவனம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாடுகளை அடி மாடுகளாக விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். எனவே மூடிக்கிடக்கும் மணல் குவாரிகளை திறந்து மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்