2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி

லாலாபேட்டை அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-15 18:38 GMT
கிருஷ்ணராயபுரம், 
லாரிகள் நேருக்கு நேர் மோதல்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38). இவர் நேற்று அதிகாலை திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சரக்கு லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். இதேபோல் கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனியை சேர்ந்த சக்திவேல் மகன் கார்த்திக் என்பவரும் சரக்கு லாரியை ஓட்டி சென்றுள்ளார்.
லாலாபேட்டை அருகே சிந்தலவாடி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது 2 லாரிகளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பின்னர் அருகே உள்ள வாழைத்தோப்புக்குள் 2 லாரிகளும் கவிழ்ந்தன.
டிரைவர் பலி
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அய்யப்பனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அய்யப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதேபோல் படுகாயமடைந்த கார்த்திக் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்