ரூ.1.90 கோடியில் செட்டிகுளம் ஊருணி புனரமைப்பு பணி

ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பில் செட்டிகுளம் ஊருணி புனரமைப்பு பணியை அமைச்சர் பெரியகருப்பன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்

Update: 2022-03-15 18:26 GMT
சிங்கம்புணரி, 
ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பில் செட்டிகுளம் ஊருணி புனரமைப்பு பணியை அமைச்சர் பெரியகருப்பன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். 
ஊருணி புனரமைப்பு 
சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் ஊருணி புனரமைப்பு செய்வதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதன் பூமி பூஜை விழா நேற்று தொடங்கியது. விழாவிற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில் என்ற செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், அவைத்தலைவர் சிவக்குமார், தொழிலதிபர்கள் குழந்தைவேல் செட்டியார், ஆர்.எம்.எஸ். சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், கடந்த 9 மாதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு மட்டும் சுமார் 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் பல திட்டங்களையும், நிதிகளையும் கொண்டு வந்து சேர்ப்போம் என்றார். 
விளையாட்டு சாதனங்கள் 
செட்டிகுளம் ஊருணி மேம்படுத்த உள்ள நிலையில் இங்கு ஊருணி சுற்றி வேலி அமைத்தல், பேவர் பிளாக் நடைபாதை அமைத்தல், குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், நடைபயிற்சி செய்பவர்கள் அமர்வதற்கு இருக்கைகள், வரத்து கால்வாய் அமைத்தல், மின்விளக்கு மற்றும் சி.சி.டி.வி. பொருத்துதல், மரக்கன்றுகள் நடுதல் என பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. விரைந்து இந்த பணி முடிக்கப்படும் என்றார். 
இந்த நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிவபுரிசேகர், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் முத்துக்குமார், ஜமாத் தலைவர் ராஜா முகமது, ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நகர பொருளாளர் கதிர்வேல், மருத்துவர் அருள்மணி நாகராஜன், கலை பகுத்தறிவு பிரிவு செல்வகுமார், சூரக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அனந்தகிருஷ்ணன், சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ரஞ்சன் துரை, பிரதிநிதி குடோன் மணி, பிரதிநிதி தருண் புகழேந்தி, இலக்கிய அணி தனுஷ்கோடி, ஒன்றிய இளைஞரணி மனோகரன், நகர இளைஞரணி அருண் பிரசாத் மற்றும் மகளிர் அணியை சேர்ந்த நிர்மலா, ரமணி, தொழில் நுட்ப அணி செய்யது இப்ராகிம், மாணவரணி கார்த்திக், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிர்காமம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்