மேலையூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு காவடி எடுத்த பக்தர்கள்

மாசி மக உற்சவத்தையொட்டி மேலையூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.

Update: 2022-03-15 18:17 GMT
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாசி மக உற்சவம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு ஆராதனை நடந்தது. பின்னர் அங்குள்ள காவிரி கரையில் இருந்து மாசி உற்சவத்தையொட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், மேளதாளம் முழங்க காவடி எடுத்து ஊர்வலமாக  கோவிலை அடைந்தனர். இதனையடுத்து இரவு அம்மனுக்கு மஞ்சள்பொடி, திரவியப்பொடி மற்றும் பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் அம்மன் வீதிஉலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்