வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கடந்த 1999-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை அரசு சார்பில் இலவச வீட்டுமனை ஆணை வழங்கப்பட்டது. இதுவரை யாருக்கும் முறையாக இட ஒதுக்கீடு செய்யப்படாததால் பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் சேதுராமனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து வட்டாட்சியர் சேதுராமன் கூறியதாவது:-அதே கிராமத்தை சேர்ந்த பரிபூரணம் என்பவர் பட்டா வழங்கலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளதால் இது குறித்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்பு தனிவட்டாட்சியர் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.