சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்
வாணியம்பாடி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பல தெருக்களில் மாடுகள், ஆடுகள், குதிரைகள் போக்குவரத்துக்கு இடையூறாக, விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன. இதனை அதன் உரிமையாளர்கள் அவர்கள் வீட்டிலேயே வளர்க்க பலமுறை அறிவுறுத்தியும் சாலைகளில் சுற்றித் திரிய விடுகின்றனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார துறையினர், நகரில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும்பணியில் ஈடுபட்டனர். நேற்று இரண்டு மாடுகள் பிடிக்கப்பட்டது.
அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் ஆடு, மாடுகள், குதிரைகள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சுற்றித் திரிந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.