தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் புகார் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் புகார் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் புகார் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
மாணவர்கள் அச்சம்
கோத்தகிரி நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் ஹேப்பி வேலி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில், பள்ளிச் சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாணவர்கள் தனியாக நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
மணி, கோத்தகிரி
நடந்து செல்ல இடையூறு
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள குறுகிய சாலையின் நடுவே காலை நேரத்தில் லாரிகளை நிறுத்தி கட்டுமானப் பொருட்கள் இறக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்வோர் அவ்வழியாக நடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பள்ளி நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக லாரிகளை நிறுத்தி கட்டுமானப் பொருட்களை இறக்குவதைத் தடுக்க வேண்டும்.
ராமகிருஷ்ணன், கோத்தகிரி.
திறந்தவெளி பாரான சாலை
கோவை டாடாபாத்தில் உள்ள பவர்ஹவுஸ் பின்புறம் இருக்கும் பைக்காரா ஆபிஸ் ரோடு இரவு நேரத்தில் திறந்தவெளி பாராக மாறி உள்ளது. இங்கு ஏராளமாக குவியும் மதுபிரியர்கள், திறந்தவெளியில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை தூக்கி வீசிச்செல்கிறார்கள். இதனால் அந்த வழியாக நடந்து செல்லவே பயமாக இருக்கிறது. எனவே அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு திறந்தவெளியில் அமர்ந்து மது குடிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரவடிவேல், கோவை.
மணலால் ஏற்படும் விபத்து
கோவையை அடுத்த சோமனூரில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறத்திலும் மணல் குவிந்து கிடக்கிறது. மேலும் காற்று வீசும்போது அந்த மணல் புழுதிபோன்று பறப்பதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து மேம்பாலத்தின் இருபுறத்திலும் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற வேண்டும்.
கந்தசாமி, சோமனூர்.
குண்டும் குழியுமான ரோடு
கோவை அவினாசி சாலையில் உள்ள சென்னி ஆண்டவர் கோவில் அருகில் இருந்து மின்பகிர்மான நிலையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இந்த சாயைில் மின்விளக்கு வசதியும் இல்லை. எனவே பழுதான சாலையை சீரமைப்பதுடன், அங்கு மின்விளக்கு வசதியையும் செய்ய வேண்டும்.
சிவகுமார், கருமத்தம்பட்டி.
வாகன ஓட்டிகள் அவதி
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள புதிய சிற்றம்பலம் லே-அவுட் பகுதியில் பாதாள சாக்கடைக்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு புதிய சாலை போடப்படவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகளும் நடந்து வருவதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ஸ்வரூப் குமார், கோவை.
தெருநாய்கள் தொல்லை
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மிகப்பெரிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் காலை, மாலை நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். சிறுவர்கள் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில், பூங்கா வளாகம் மற்றும் வெளிப்புறத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் இங்கு வருபவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவக்குமார், பொள்ளாச்சி.
போக்குவரத்துக்கு இடையூறு
கோவை பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. கோவில்பாளையத்திற்க்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சர்வீஸ் சாலையில் சென்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது. தற்போது இந்த சர்வீஸ் சாலை பகுதியில் ரோட்டோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொள்ளாச்சி, கோவையில் இருந்து சர்வீஸ் சாலையில் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துக்குமார், கோவில்பாளையம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே சாலையோரத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாததால் அந்த வழியாக செல்பவர்கள் பொிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், அங்கு படித்து வரும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
ரஞ்சித்குமார், மேட்டுப்பாளையம்.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
கோவை-சத்தி ரோட்டில் உள்ள அத்திப்பாளையம் பிரிவில் இருந்து வி.ஜி.ராவ் நகர் செல்லும் சாலையில் சிக்னல் அருகே குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
முத்துக்குமார், கோவை.