விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைத்த மத்திய அரசை கண்டிப்பது, 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும், அதற்கான தினக்கூலி ரூ.600 என உயர்த்தி வழங்க வேண்டும், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தி முறையாக செயல்படுத்த வேண்டும், பழுதடைந்த தொகுப்பு வீட்டினை அகற்றி 400 சதுர அடியில் ரூ.6 லட்சம் மதிப்பில் வீடு கட்டித்தர வேண்டும், அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு குழு உறுப்பினர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் வேல்முருகன், வட்ட பொறுப்பாளர் ரீதா, வட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கஜேந்திரன், சின்னசாமி, வெங்கடேசன், கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.