தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

தேனி அருகே நோய் கொடுமையால் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-15 14:59 GMT
தேனி:

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த வீரபத்திரன் மனைவி விமலா என்ற விமலமணி (வயது 82). இவருடைய கணவர், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரும், இவருடைய தங்கை வீரமணியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் விமலா சர்க்கரை நோய் மற்றும் மூலநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். 

சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாத விரக்தியில் நேற்று அதிகாலையில் அவர் தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஒரு கேனில் அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் எடுத்துச் சென்றார். அங்கு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அவர் உடல் கருகி உயிரிழந்தார். 

சம்பவ இடத்துக்கு பழனிசெட்டிபட்டி போலீசார் வந்து, விமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரமணி கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்