கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஓய்வூதியர்கள் போராட்டம்
கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. இதற்கு கிளை தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். கிளை துணை செயலாளர் நந்தியப்பன் வரவேற்றார். செயலாளர் முனிரத்தினம், பொருளாளர் சந்திரன், மண்டல செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். இணை செயலாளர் வெங்கடாஜலம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மின்துறை பொது துறையாகவே நீடிக்க வேண்டும். பவள விழா சலுகையாக 3 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மின்வாரிய ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.