கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-15 14:54 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனி, மாவட்டக்குழு உறுப்பினர் சங்கர், நகர துணை செயலாளர் முனியன், நகர செயலாளர் உபேத், மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் குப்பன் ஆகியோர் பேசினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட செலவுக்கு ரூ.2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலுவை இல்லாமல் சம்பளம் வழங்க வேண்டும். வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்