காயம் அடைந்த 2 மயில்களுக்கு சிகிச்சை
காயம் அடைந்த 2 மயில்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி அருகே உள்ள பொன்மலைகுட்டை மலை பகுதியில் பெண் மயில் ஒன்று காயமடைந்து கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று காயமடைந்த மயிலை மீட்டு கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் வன அலுவலகத்தில் தண்ணீர், உணவு வழங்கி பாதுகாத்து வருகின்றனர்.
அதேபோல் என்.தட்டகல் கிராமத்தில் காயமடைந்த மயிலையும் வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகின்றனர்.