மலர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்
நெல்லுக்கு பதிலாக வயல்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம்:
முல்லைப்பெரியாறு தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப்-பழனிசெட்டிபட்டி வரை பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது.
நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களை, தரிசாக விடாமல் குறுகிய கால பயிர்களான பயறு வகை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நெல் விவசாயத்துக்கு மாற்றாக வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் சிலர் ஈடுபடுகின்றனர்.
கம்பம் அருகே உள்ள அண்ணாபுரத்தில் விவசாயிகள் சிலர், வயல்களில் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில வருடங்களாக உரம், அறுவடை கூலி உயர்வால் நெல் விவசாயத்தின் மூலம் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் நெல் சாகுபடிக்கு பதிலாக, வயல்களில் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். இதன் மூலம் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கிறது என்றனர்.