தொல்பொருள் பாதுகாப்பு பயிற்சி
பழனி அருங்காட்சியகத்தில் தொல்பொருள் பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி நடந்தது.
பழனி:
பழனி அரசு அருங்காட்சியகத்தில், பழனியாண்டவர் கலைக்கல்லூரி மாணவிகளுக்கு தொல்பொருள் பாதுகாப்பு குறித்த பயிற்சி நடந்தது. இதற்கு அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். பழனியாண்டவர் கலைக்கல்லூரி வரலாற்று துறை தலைவர் ஜெயந்திமாலா, அருங்காட்சியக பணியாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி அருங்காட்சியக அலுவலர் சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். ஓலைச்சுவடிகள், பழங்கால உலோக கருவிகள், கற்சிலைகள் ஆகியவற்றை பாதுகாத்தல், சுத்தம் செய்தல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பழனியாண்டவர் கலைக்கல்லூரி வரலாற்று துறை மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.