திருநெடுங்களநாதர் கோவில் வருடாபிஷேகம்

திருநெடுங்களநாதர் கோவில் வருடாபிஷேகம்

Update: 2022-03-15 12:55 GMT
திருவெறும்பூர்,மார்ச்.16-
துவாக்குடி அருகே திருநெடுங்குளம் கிராமத்தில் திரு நெடுங்களநாதர் கோவில் உள்ளது. இங்கு இறைவன் நித்திய சுந்தரேஸ்வரராகவும், இறைவி மங்களாம்பிகை யாகவும் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வருடாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, 108 சங்கு பூஜை, யாக வேள்விகள், ருத்ர திரிசதிஹோமம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து செல்வ விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், திருநெடுங்களநாதர் மங்களாம்பிகை மற்றும் உற்சவ பஞ்சமூர்த்திகள் நால்வருக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.  மூலவருக்கு கலச அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெற்றிவேல் தலைமையில்  அர்ச்சகர்கள் சிவநெறி செம்மல் சோமசுந்தர சிவாச்சாரியார், ரவி, ரமேஷ் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்