மளிகைக்கடையில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்

மளிகைக்கடையில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்

Update: 2022-03-15 12:09 GMT
செம்பட்டு,மார்ச்.16-
திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை கணேஷ் நகர் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் சந்திரசேகர் (வயது 41). இவரது கடையை இன்றுகாலையில் திறப்பதற்கு முன்பு கடையில் இருந்து புகை வந்தது. இதை கண்ட அப்பகுதியினர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த அவர் கடையை திறந்து பார்த்தபோது, கடை தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்