சைக்கிளில் சென்ற விவசாயி கார் ேமாதி பலி காரில் இறங்கி குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ஆறுதல்

சைக்கிளில் சென்ற விவசாயி கார் மோதி பலியானார். விபத்து நடந்தபோது அந்த வழியாக சென்ற 2 அமைச்சர்கள் காரில் இருந்து கீழே இறங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Update: 2022-03-15 11:39 GMT
ஜோலார்பேட்டை

சைக்கிளில் சென்ற விவசாயி கார் மோதி பலியானார். விபத்து நடந்தபோது அந்த வழியாக சென்ற 2 அமைச்சர்கள் காரில் இருந்து கீழே இறங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

விவசாயி

நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லபள்ளி சுண்ணாம்பு குட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பெருமாள் (வயது 58). விவசாயி. நேற்று காலை பெருமாள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காலை 9.25 மணியளவில் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்தனது சைக்கிளில் சாலை கடக்க முயன்றார்.

அப்போது வேலூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கார், அவர்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். இறந்தவருக்கு விமலா என்கின்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் பெருமாளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அமைச்சர்கள் ஆறுதல்

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துணி நூல் துறை அமைச்சர் காந்தி, தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் காரில் சென்று கொண்டு இருந்தனர். விபத்து நடந்த இடத்துக்கு சென்றபோது 2 அமைச்சர்களும் காரில் இருந்து இறங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். அதன் பிறகு நாட்டறம்பள்ளி போலிசாருக்கு விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் பெருமாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் நாகூர் மீரான் (60) என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்