சேலத்துக்கு சரக்கு ரெயில்களில் வந்த 5,442 டன் கோதுமை

சேலத்துக்கு சரக்கு ரெயில்களில் 5,442 டன் கோதுமை கொண்டு வரப்பட்டன.

Update: 2022-03-14 22:08 GMT
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து 2 சரக்கு ரெயில்களில் 5 ஆயிரத்து 442 டன் கோதுமை சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது.
இந்த கோதுமை மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயில்களில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். பின்னர் அவைகள் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் கரூரில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,100 டன் சிமெண்டு மூட்டைகள் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அந்த மூட்டைகளையும் ரெயிலில் இருந்து தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர். இதையடுத்து அவைகள் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும் செய்திகள்