ஓடைக்குள் கவிழ்ந்த கார் 8 பேர் காயம்

சுருளகோடு அருகே ஓடைக்குள் கார் கவிழ்ந்தது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-03-14 21:40 GMT
குலசேகரம்.:
சுருளகோடு அருகே ஓடைக்குள் கார் கவிழ்ந்தது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
குலசேகரம் சுருளகோடு வழியாக நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலையில் கேரள மாநில பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் சுருளகோடு அருகே வெட்டுத்திருத்திக் கோணம் என்ற இடத்தில் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் கவிழ்ந்தது. இதையடுத்து காரில் இருந்த 8 பேர் அதனுள் சிக்கிக் கொண்டனர். 
உடனே அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் காரில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்கள் அனைவரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்்சை அளிக்கப்பட்டது. 
இந்த விபத்து குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---

மேலும் செய்திகள்