குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயமானார்.

Update: 2022-03-14 20:50 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 38). லாரி டிரைவர். இவரது மனைவி லதா(33). இவர்களுக்கு மனோஜ்(11), சூர்யா(8) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து லதா, தனது குழந்தைகளுடன் வெளியே சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. வேலைக்கு சென்றிருந்த செல்வராஜ் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக செல்வராஜ் கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்