ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் விருதுநகர் மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டி, சிவகாசி மாரியப்பன், அருப்புக்கோட்டை சவுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மாநிலத்தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் கோட்ட பொறுப்பாளர் சம்பத் நன்றி கூறினார்.