மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல் தனியார் ஐ.டி.ஐ. முதல்வர் பலி
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் தனியார் ஐ.டி.ஐ. முதல்வர் பலியானார்.
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் தனியார் ஐ.டி.ஐ. முதல்வர் பலியானார்.
ஐ.டி.ஐ. முதல்வர்
கோபி அருகே உள்ள அவ்வையார்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 59). இவர் கோபி அருகே கரட்டடிபாளையத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.-ல் முதல்வராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இவர் நல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள சத்தியமங்கலம்- ஈரோடு ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவருடைய மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
சாவு
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து ஆனந்தன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆனந்தன் நேற்று பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் இறந்த ஆனந்தனுக்கு வசந்தி என்ற மனைவியும் மோகன் பிரசாத் என்ற மகனும், ஹேமாவதி என்ற மகளும் உள்ளனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.