உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ள பூச்சிபட்டியை சேர்ந்தவர் முத்து கண்ணன் (வயது 65). இவரும் முத்துமாயன் என்பவரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குஞ்சாம்பட்டி எனும் இடத்தில் சென்ற போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த பூச்சிபட்டியைச் சேர்ந்த முத்துக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்துமாயன் (52) படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரன் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து ஆம்புலன்சில் முத்துமாயன் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.