திங்கள்சந்தை அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

திங்கள்சந்தை அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-14 19:48 GMT
திங்கள்சந்தை, மார்ச்.15-
திங்கள்சந்தை அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
திங்கள்சந்தை அருகே உள்ள மேல்கரையை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவருடைய மனைவி ஞானப்பிரகாசி (வயது 63). இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். மேலும், சுயஉதவி குழுவில் இருந்து கடன் வாங்கி வேறு ஒரு நபருக்கு பணத்தை கடன் கொடுத்ததாகவும், வாங்கியவர் உரிய நேரத்தில் திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக ஞானப்பிரகாசி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஞானப்பிரகாசி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஞானப்பிரகாசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து அவரது மகன் ஜான்சன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்