அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைப்பு

விழுப்புரத்தில் அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது.

Update: 2022-03-14 19:43 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று இரவு 7 மணியளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் விழுப்புரம்- செஞ்சி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருந்த பயணிகளில் யாரோ மர்ம நபர் ஒருவர், ஆத்திரமடைந்து அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கினார். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. இதுகுறித்து பஸ் டிரைவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்