மணப்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (60) தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்த இவர் நேற்று முன்தினம் திருச்சிக்கு சென்று வியாபாரத்திற்கு பழ வண்டி ஒன்று எடுத்துக்கொண்டு மணப்பாறை நோக்கி வந்து கொண்டிருந்தார். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மரவனூர் அருகே கொட்டப்பட்டி பிரிவு சாலை என்ற இடத்தில் வந்த போது திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் முஸ்தபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.