ஆடுகள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ஆடுகள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்துது.

Update: 2022-03-14 18:27 GMT
கரூர்
தோகைமலை, 
தோகைமலை அருகே உள்ள புழுதேரி இந்திய வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு அட்மா திட்ட நிதி உதவியுடன் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பு குறித்து பயிற்சிகள் நடைபெற்றது. இதற்கு இந்தியன் வேளாண்மை மையம் முதுநிலை விஞ்ஞானி திரவியம் தலைமை தாங்கினார். இதில், கரூர் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் கலைச்செல்வி, நபார்டு வங்கி துணை பொது மேலாளர் பரமேஷ் குமார், மாவட்ட கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் தினேஷ், கரூர் மாவட்ட இணை இயக்குனர் சிவசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்