கே.வி.குப்பம் அருகே விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்

கே.வி.குப்பம் அருகே விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-03-14 18:10 GMT
கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கநேரியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ஆகியவை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

 வேளாண்மை உதவி இயக்குனர் வினித்மேக்தலின் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி பொறியாளர் ஸ்ரீராமுலு, வேளாண்மை அலுவலர் நித்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜன் பற்குணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா கருணாகரன் வரவேற்றார்.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் அமரேந்திரன், பார்கவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பயிற்சி முடிவில் முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேர்அழுகல் நோயைத்தடுக்கும் இடுபொருள்கள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்