பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இளையான்குடி,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார மகளிர் திட்ட இயக்கம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் சென்னை புளூ ஓசன் பர்சனல் அன் ஆலாய்டு சர்வீஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான், கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர், இளையாங்குடி தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட மேலாளர் சுந்தரமூர்த்தி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மனிதவள மேலாளர் ராம்கி வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு முறை குறித்து விளக்கினார். நேர்முகத்தேர்வில் 151 பேர் கலந்து கொண்டதில் 115 பேர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்றவர் களுக்கு கல்லூரி ஆட்சி குழு செயலர் ஜபருல்லா கான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நசீர் கான், அபுபக்கர் சித்திக், துணை முதல்வர் ஜஹாங்கீர், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ் கான், ஒருங்கிணைப்பாளர் ஜெய முருகன் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப் பாளர் சம்சுதீன் இப்ராஹிம் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். கல்லூரி வேலை வாய்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் இப்ராஹிம் நன்றி கூறினார்.