ஆர்ப்பாட்டம்

கரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-03-14 18:06 GMT
கரூர்
கரூர், 
கரூர்-கோவை சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் ராஜலிங்கம் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் முருகவேல், பொருளாளர் விஜயகுமார், அமைப்பு செயலாளர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 1.12.2019 முதல் வழங்கிட வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். பகுதிநேர சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத பிரிவு அலுவலகங்களுக்கு பணியமர்த்திட வேண்டும். தலைமை பொறியாளர் (பணியமைப்பு) பதவிக்கு வாரிய செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியதை ரத்து செய்து பொறியாளரை நியமித்திட வேண்டும். துறைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிறுத்திய ஆண்டு உயர்வை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்