குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடந்தது.

Update: 2022-03-14 17:55 GMT
சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,200 பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய  வட்டார மருத்துவர் நபிஷா பானு ஏற்பாட்டில் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை கலாநிதி சக்திவேல் வரவேற்றார்.  சிறப்பு முகாமில் சிறப்பு அழைப்பாளராக சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில் என்ற செந்தில்குமார் மற்றும் ஜமாத் தலைவர் ராஜாமுகமது கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினா்.  மாத்திரையின் பலன்கள் குறித்து மாணவிகளிடம் மருத்துவர் நிவேதா மற்றும் வட்டார மேற்பார்வையாளர் தினகரன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.  பேரூராட்சி  தலைவர் அம்பலமுத்து , சுகாதார ஆய்வாளர் எழில்மாறன், பிரான் மலை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் வசந்தி, மங்கையர்கரசி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சேவுகமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் சேவுக ரெத்தினம் மற்றும் ஆசிரியைகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாத்திரைகள் சிங்கம்புணரி குழந்தைகள் ஊட்டச்சத்து மையம், கிராம சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து வழங்கப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கூறினார்.

மேலும் செய்திகள்