ஜோலார்பேட்டை அருகே கார் மோதி முதியவர் பலி

ஜோலார்பேட்டை அருகே கார் மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-03-14 17:50 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி மூர்த்தியூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). கூலி வேலை செய்து வந்தார். வீட்டில் இருந்து டீ குடிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  மேல்சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்