இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-03-14 17:40 GMT
பொம்மிடிடு
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா  நடந்தது. விழாவையொட்டி  கணபதி ஹோமம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி, நவகிரக ஹோமம், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள், தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றன. காலை 4-ம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. பின்னர் கோபுரம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்