நன்செய்இடையாறு மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா தொடங்கியது

நன்செய்இடையாறு மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா தொடங்கியது

Update: 2022-03-14 17:39 GMT
பரமத்திவேலூர்:-
நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா தொடங்கியது.
மாரியம்மன் கோவில்
பிரசித்தி பெற்ற நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் தீமிதி விழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மாரியம்மன் கோவில் விழா கம்பம் நடும் நிகழ்ச்சி  நடந்தது.
இதைதொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சியை அடுத்து தீமிதி மற்றும் பூ போடும் விழாவிற்கு விரதம் இருக்கும் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி
வருகிற 20-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி 26-ந் தேதி வரை தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. 27-ந் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி மிக நீளமான குண்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண் பக்தர்கள் மட்டும் தீ மிதித்தும், பெண்கள் பூ போடும் விழாவிலும் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். அன்று இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. 29-ந் தேதி காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மாலை மாவிளக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.
30-ந் தேதி காலை கம்பம் ஆற்றில் விடுதலும், மஞ்சள் நீராடல் விழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்கள், எட்டுபட்டி ஊர் தர்மகர்த்தாக்கள் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்