நல்லம்பள்ளி தாலுகா அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

நல்லம்பள்ளி தாலுகா அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-14 17:38 GMT
நல்லம்பள்ளி:
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலுக்காக தர்மபுரி மாவட்டம் முழுவதிலும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் அரசு நிர்ணயித்த தேதிகளில் விவசாயிகள் வேட்பு மனுக்கள் செய்திருந்தனர். இதேபோல் நல்லம்பள்ளி அருகே உள்ள தொப்பையாறு அணை வலதுப்புற கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல், நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் பாசன விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு பரிசீலினை மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவித்து பட்டியல் நேற்று வெளியிடவில்லை. இதனால் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த விவசாயிகள் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாசன சங்க தேர்தலை அரசு விதிகளுக்குட்பட்டு வெளிப்படையாக நடத்த வேண்டும் என கூறினர்.

மேலும் செய்திகள்