வேப்பனப்பள்ளி அருகே கோவில் கும்பாபிஷேக விழா

வேப்பனப்பள்ளி அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-03-14 17:38 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள பஸ்வேசுவர சாமி மற்றும் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், யாகசாலை பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று கோவில் கோபுரம் மற்றும் சாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்்து மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்