கிருஷ்ணகிரியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை நகராட்சி தலைவர் வழங்கினார்

கிருஷ்ணகிரியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை நகராட்சி தலைவர் வழங்கினார்.

Update: 2022-03-14 17:37 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் சுகாதார பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். ஆணையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் சுகாதார அலுவலர் மோகன சுந்தரம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகரில் சுகாதார பணிகளை மேற்கொள்வது குறித்து நகராட்சி தலைவர் பரிதா நவாப் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நகராட்சியில் பணிபுரிய கூடிய தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் சீருடைகளை வழங்கினார். பின்னர் நகராட்சி தலைவர் பரிதா நவாப் பேசியதாவது:- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது பணி மேலும் சிறக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும், குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சில வார்டுகளில் குப்பைகள் சரியாக அள்ளுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த வார்டுகளில் கூடுதல் தூய்மை பணியாளர்கள் அனுப்பப்பட உள்ளனர். குப்பைகள் இல்லாமலும், சாக்கடை கால்வாய்களை சுத்தப்படுத்தியும், கிருஷ்ணகிரி நகராட்சியை தூய்மையாக வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்