புல்தானாவில் கோர விபத்து லாரி மீது ஜீப் மோதி 5 பேர் பலி 7 பேர் படுகாயம்

புல்தானாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 5 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-14 17:24 GMT
கோப்பு படம்
மும்பை, 
புல்தானாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 5 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி மீது மோதியது
ஜல்னா மாவட்டம் ரோகன்வாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை சேகாவில் உள்ள கோவிலுக்கு ஜீப்பில் புறப்பட்டு சென்றனர். ஜீப் அதிகாலை 5.30 மணியளவில் புல்தானா மாவட்டம் தேவ்ல்காவ் ராஜா நகர் அருகே சென்று கொண்டு இருந்தது. 
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு வளைவில் எதிரே வந்த லாரி மீது ஜீப் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
5 பேர் பலி
இந்த பயங்கர விபத்தில் ஜீப் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் அதில் இருந்தவர்கள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 
படுகாயமடைந்த 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து புல்தானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்