கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் திருடிய 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-14 17:16 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு உதவியாக சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் கலைவாணன் (வயது 27) என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கலைவாணன் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய சட்டை பையில் இருந்த செல்போனை 2 பேர் திருடிக்கொண்டிருந்தனர். 

அப்போது திடுக்கிட்டு எழுந்த கலைவாணன் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 பேரையும் பிடித்தார். பின்னர் அவர்களை கள்ளக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சக்திவேல் (25), தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த மாரி மகன் சின்ன எம்.ஜி.ஆர். (26) என்பதும், இவர்கள் கலைவாணன் மற்றும் சங்கராபுரம் தாலுகா பாவளம் கிராமத்தை சேர்ந்த தண்டபாணியின் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்