மத்திய முகமைகள் பழிவாங்கும் ரீதியில் செயல்படுகிறது சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மராட்டியத்தில் ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய முகமைகள் பழிவாங்கும் ரீதியில் செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2022-03-14 17:10 GMT
கோப்பு படம்
மும்பை, 
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மராட்டியத்தில் ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய முகமைகள் பழிவாங்கும் ரீதியில் செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
பழிவாங்கும் ரீதியில்...
போன் ஒட்கேட்பு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் பி.கே.சி. சைபர் கிரைம் போலீசார் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் விசாரணை நடத்தினர். போலீசார் தேவேந்திர பட்னாவிசிடம் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், மராட்டியத்தில் ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய முகமைகள் பழிவாங்கும் ரீதியில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
முகமைகளுக்கு டார்கெட்
இது தொடா்பாக அவர் கூறியதாவது:- 
ஆளுங்கட்சி தலைவர்களுக்கும் மத்திய விசாரணை முகமைகள் சம்மன் அனுப்பியது, ஆனால் நாங்கள் எந்த நாடகத்தையும் போடவில்லை. மராட்டியத்தில் உள்ள தலைவர்களுக்கு எதிராக மத்திய முகமைகள் பழிவாங்கும் ரீதியில் செயல்படுகின்றன. அவர்களுக்கு மராட்டியத்தில் டார்கெட் (இலக்கு) கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப விசாரணை முகமைகள் செயல்படுகின்றன.
பெரியதலைவரான மோடியை, சிறுமைப்படுத்த சில பா.ஜனதாவினரே முயற்சி செய்கின்றனர். பெரிய தலைவரான சரத்பவாருக்கு எதிராக அந்த 2 பேர் (நிலேஷ், நிதேஷ் ரானே) கூறிய வார்த்தைகளை மோடி, நிதின் கட்காரி, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஏற்றுகொள்வார்களா?.
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்