காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சின்னமனூர் அருகே காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா நடந்தது
உத்தமபாளையம்:
சின்னமனூர் அருகே உள்ள புலிகுத்தி கிராமத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபட்டத்தரசி காமாட்சியம்மன் கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. விழாவிற்கு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கி, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல், மகளிர் அணி செயலாளர் சிவசாமி சுந்தரி, புலிகுத்தி ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராஜ், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி, மாநில அமைப்புச் செயலாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் பானு சேதுராஜன், திருப்பணி கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.