பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

வேதாரண்யத்தில் பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-14 16:30 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட நேரு நகரைச் சேர்ந்தவர் அனுப்பிரியா (வயது21).இவர் திருவாரூர் மாவட்டம் கலப்பால் பகுதி எழிலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அனுப்பிரியா தனது பெற்றோர் வீட்டில் தங்கி வேதாரண்யம் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அனுப்பிரியா வெளியில் சென்றபோது நேரு நகரை சேர்ந்த அவரது பெரியம்மா மீனா மற்றும் அவரது மகன்கள் காளிதாஸ் (28), மணிமாறன் ஆகியோர் சேர்ந்து அனுப்பிரியாவை தரைகுறைவாக திட்டி உருட்டை கட்டையால் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மீனா மற்றும் அவரது மகன் மணிமாறன் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்