திருச்செந்தூரில் பேன்சி கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்
திருச்செந்தூரில் பேன்சி கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் புளியடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). இவர் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பேன்சி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அடிக்கடி அவர் கடை மற்றும் பக்கத்து கடைகளில் திருட்டு சம்பவம் நடந்து வந்துள்ளது. இதனால் இரவு காவலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று அதிகாலை ஒருவர் கடையை மூடியிருந்த தார்ப்பாயை விலக்கி கடை உள்ளே சென்று பணப்பெட்டியை திறந்து பணத்தை திருடியுள்ளார். அப்போது காவலில் இருந்தவர்கள், திருடனை கையும் களவுமாக பிடித்து கோவில் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பாளையங்கோட்டை திம்மராஜபுரம் கோட்டூர் அழகு நாச்சியார் அம்மன் கோவில் தெரு சேர்ந்தவர் இசக்கி மகன் கார்த்திசன் (26) என்பது தெரியவந்தது. கார்த்திசனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.560ஐ பறிமுதல் செய்தனர்.