உச்சிகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பழனி அருகே அக்கமநாயக்கன்புதூரில் உள்ள உச்சிகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது

Update: 2022-03-14 14:46 GMT
நெய்க்காரப்பட்டி:
பழனி அருகே அக்கமநாயக்கன்புதூரில் உள்ள உச்சிகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கலசபூஜை, பூர்ணாகுதி, கலச புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.


பின்னர் விநாயகர், உச்சிகாளியம்மன், கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அக்கமநாயக்கன்புதூரை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்