நெகமம் ஒழுங்குமுறைக்கூடத்தில் ரூ 22 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் விற்பனை

நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.22 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-03-14 14:19 GMT
நெகமம்

நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.22 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டது.

கொப்பரை தேங்காய்

தமிழகம் முழுவதும் 42 கொப்பரை தேங்காய் கொள்முதல் மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம், 51 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் செஞ்சேரி மலை, நெகமம் ஆகிய இரு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. 
இதனால், கொப்பரை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் தொடங்காமல் இருந்தது. இந்தநிலையில் நெகமத்தில் அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் கொள்முதல் கடந்த மாதம் முதல் தொடங்கப்பட் உள்ளது. 

400 மூட்டை கொள்முதல்

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 15 விவசாயிகள் 400 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இது ரூ.22 லட்சத்திற்கு விற்பனை ஆனது. மேலும், விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, சேமிப்புக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வந்து கொப்பரை தேங்காயை விற்பனைக்கு பதிவு செய்தனர். இதில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகளிடம் அரசு ஆதார விலை திட்டத்தில் கொப்பரைகளை கொண்டு வந்து விற்று பயன் அடை வேண்டும். விவசாயிகளின் பதிவு எண்களின் அடிப்படையில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வாணி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்