கியாஸ் கசிந்து தகரகொட்டகையில் தீ

கியாஸ் கசிந்து தகரகொட்டகையில் தீ

Update: 2022-03-14 14:19 GMT
முசிறி, மார்ச்.15-
முசிறி சாலியத் தெருவை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி சிவகாமி (வயது 70). இவர் இதே பகுதியில் தகர கொட்டகையில் வசித்து வருகிறார். நேற்று சிவகாமி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். அப்போது, கியாஸ் கசிந்து கொட்டகை பற்றி எரிந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் முசிறி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அந்தோணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ரூ.6ஆயிரம், வீட்டு பத்திரம் மற்றும்  முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்