கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி

கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி

Update: 2022-03-14 14:09 GMT
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 60-வது வார்டுக்கு உட்பட்ட அமராவதி பாளையத்தில் கால்நடை சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு வரும் கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீர் வசதி செய்யும் வகையில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கடந்த வாரம் ‘தினத்தந்தி’யிலும் செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், சந்தையில் குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு நேற்று முதல் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும் கால்நடை சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு குடிநீர் வசதி செய்ய தண்ணீர் தொட்டி அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இந்த சந்தையில் வசூல் செய்யப்படும் சுங்க கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்